கிரான் பிரதேசசபைக்குட்பட்ட இந்த கிராம மக்களின் குறை தீர்க்கப்படுமா?
கிரான் பிரதேசசபைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், கிராமசேவகர் மற்றும் அரசதிகாரிகளை எதிர்த்து கிராமப் பெண்கள் துணிச்சலாகப் போரடிவருகின்றனர்.அதிகாரிகளின் அதிகார துஸ்பிரயோகம், மற்றும் நடத்தை காரணமாக அவர்கள் தமக்குத் தேவையில்லை எனக் கோருகின்றனர்.
- காணாமல் போனோர் இழப்பீட்டீல் பங்கு-லஞ்சம்,
- கடமை நேரத்தில் மது போதை,
- பெண்கள் மீது பாரபட்சம்,
- அதிகார துஸ்பிரயோகம்,
- மக்களிடையே பிளவு,பிரிவினையைத் தூண்டுதல்,
- குடி நீர்ப் பிரச்சனை,
என கிராம மக்களின் குற்றப்பட்டியல் நீள்கின்றது.இதனை எதிர்த்து பெண்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டு -மகளிர் அமைப்பு மூலம்-போராடி வருகின்றனர்.
பெண்கள் போராட்டம் வெல்க! அதிகாரத்துவம் ஒழிக!! மக்கள் அதிகாரம், ஜனநாயகம் மலர்க!!!
எனக் கிளர்ந்தெழும் மக்கள் எழுச்சியின் மூலமே இந்த கிராம மக்களின் குறை தீர்க்கப்படும்.☀
