நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

முஸ்லிம்-பள்ளிவாசற் படுகொலைகளின் 35 ஆம் ஆண்டு நினைவு


முஸ்லிம்-பள்ளிவாசற் படுகொலைகளின் 35 ஆம் ஆண்டு நினைவு

1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்து, ஈழவிடுதலைப் புரட்சிக்கு மாறாக் களங்கத்தை ஏற்படுத்திய `வடக்கு முஸ்லிம் விரட்டியடிப்பில்` வந்து நின்றது இந்த வன்முறை வெறியாட்டம்.

காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்கள், குருக்கள் மட யாத்திரையாளர்கள் என முஸ்லிம் மக்கள் மீது புலி அமைப்பினர் ஏவிய காட்டுமிராண்டி வன்முறைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

இத் தொடர் கோர நிகழ்வுகளின் 35 ஆம் ஆண்டு நினைவு இவ்வாண்டு ஒகஸ்ட் ஆகும்.

ஈழ முஸ்லிம்கள் ஆறாத்துயருடன், மாறா வலியுடன் இப்பழியை இவ்வாண்டும் நினைவு கூர்ந்தனர், நீதி கோரினர்.

நீதி கோரும் அவர்களது நியாயமிக்க போராட்டம் வெற்றி வரை தொடர வேண்டும்.

இச் சந்தர்ப்பத்தில் 2023 ஆண்டு பி.பி.சி தமிழோசை வெளியிட்ட செய்தி அறிக்கையின் சுருக்கத்தை சில புகைப்படங்களுடன் மீள் பிரசுரம் செய்கின்றோம்.

மேலும் இவ்வாண்டு நிகழ்வுகளின் News First TV செய்தித் தொகுப்பையும் இணைத்துள்ளோம்.

-தமிழீழச் செய்தியகம்.

04-08-2025

பள்ளிவாசற் படுகொலைகளின் 35 ஆம் ஆண்டு நினைவு 

கிழக்கு மாகாணம் - காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் 1990 ஆகஸ்ட் 03ஆம் தேதி - இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 103 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதன்போது காயப்பட்ட 21 பேர் பின்னர் மரணித்தனர்.

இந்தச் சம்பவம் நடந்து 10 நாட்களாவதற்குள், ஏறாவூர் முஸ்லிம்கள் மீது - புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 121 பேரை படுகொலை செய்தனர்.

இச்சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வு  'சுஹதாக்கள் தினம்' எனும் பெயரில் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது

ஜாஹிரா

வயிற்றில் காயம் - இன்றும் அவதிப்படும் ஜாஹிரா

ஏறாவூர் படுகொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, காயங்களுடன் தப்பியவர்களில் மற்றொருவர் ஜாஹிரா. அவரின் இடுப்புத் தொடைப் பகுதி மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களின் பாதிப்புகளினால் அவர் இன்னும் அவதியுறுகிறார். வயிற்றினுள் தோட்டா பாய்ந்ததில் தனது சிறுநீர்பை பாதிப்படைந்து விட்டதாக ஜாஹிரா தெரிவிக்கின்றார். அவருக்கு இப்போது 49 வயதாகிறது. சம்பவம் நடந்த போது சாதாரண தரம் (10ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தார்.

__________________________________________

அந்த சம்பவத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் - 'சுஹதாக்கள் பூங்கா' என அழைக்கப்படுகிறது. ஏறாவூர் நூரானியா பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், நினைவுக் கட்டடம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் படுகொலையானவர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டுள்ளன.

ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாக - 'சுஹதாக்கள் பேரவை' இயங்கி வருகின்றது.

'சுஹதாக்கள் பேரவை'யின் தலைவராக இருந்த திரு. அப்துல் லத்தீப் அவர்கள் 2023 இல்  பிபிசி இற்கு அளித்த பேட்டியில்,

ஏறாவூரில் கொல்லப்பட்ட 121 முஸ்லிம்கள்

முழுக் குடும்பத்தையும் இழந்த நியாஸ்

அந்தத் தாக்குதலின்போது தனது குடும்பத்தில் தாய், தந்தை ஒரு ஆண் சகோதரர் மற்றும் மூன்று சகோதரிகள் என, அத்தனை பேரையும் இழந்து - தனியாளாக உயிர் தப்பியவர் எம்.ஐ.எம். நியாஸ். அப்போது இவருக்கு 15 வயது. 

__________________________________________ 

``1990ஆம் ஆண்டு புலிகள் அமைப்பினரால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அந்த அமைப்பின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக கருணா அம்மான் இருந்தார். புலிகள் அமைப்பில் அப்போது இருந்த பிள்ளையானும் தற்போது உயிருடன் இருக்கின்றார். எனவே, அந்தப் படுகொலைகளுக்காக இவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்,`` என கூறினார்.

முப்பது வருடங்களுக்கும் மேல் நடந்த உள்நாட்டு யுத்தத்தில், தமிழர்களைப் போலவே முஸ்லிம்களும் பெரியளவில் உயிர், உடமைகளை இழந்துள்ளனர் 

ஆனால், அவை குறித்து இதுவரையில் முறையான விசாரணைகள் எதனையும் அரசு நடத்தவில்லை எனக் கூறிய அப்துல் லத்தீப், இனியாவது அதனை அரசு செய்ய வேண்டும் என்றார். "அது நடக்கவில்லை என்றால், நாங்களும் சர்வதேசத்தின் உதவியை அதற்காக நாடும் நிலை ஏற்படும்” எனவும் தெரிவித்தார்.

    • யூ.எல். மப்றூக்
    • பதவி,

      பிபிசி தமிழுக்காக 14 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 15 ஆகஸ்ட் 2023, சுருக்கமும் திருத்தமும் ENB 04-08-2025,  நன்றி: BBC Tamil, News First TV

ஒத்தவை: