நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

சட்டவிரோத மீன்பிடிக்கு சம்மாட்டிகள் போராட்டம்.


மீனவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை  தோல்வி -திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம்!

GTN August 19, 2025

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று  (19) தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மாலை  4 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து  புறப்படும் தாம்பரம் விரைவு ரயில் மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இந்நிலையில் மீனவர்களுடன் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 ஆனால் மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் எழுந்து சென்றனர்.

கூட்டத்தை விட்டு வெளியே வந்த மீனவர்கள் திட்டமிட்டபடி இன்று 19)  ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்

ஒத்தவை: