நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

கலைமகள் கைப்பொருள் கைது!


டக்ளஸ் தேவானந்தா கைது 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

இராணுவத்தால் அவருக்கு சட்ட பூர்வமாக வழங்கப்பட்ட பிஸ்டல் வகை துப்பாக்கி, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் வாக்குமூலத்தை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா 2025.12.27 அன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்புப் பயன்பாட்டிற்காக ஒரு துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, பிரபல திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது ஒரு துப்பாக்கி வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது.

குறித்த துப்பாக்கியின் தொடர் இலக்கங்களை (Serial Numbers) பரிசோதித்த போது, அது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட (2001) அதே துப்பாக்கி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கி எவ்வாறு ஒரு பாதாள உலகக் குழுத் தலைவரின் கைக்குச் சென்றது என்பது குறித்தும், அது எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்தும் அமைச்சரிடம் விசாரிக்கப்பட்டது. எனினும், இது தொடர்பாகப் போதுமான அல்லது தெளிவான விளக்கங்களை அளிக்க அவர் தவறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனடிப்படையிலேயே, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட  காவற்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


CID arrests former Minister Douglas Devananda over missing firearm

26 December 2025

The Criminal Investigation Department (CID) arrested former Minister Douglas Devananda in connection with an investigation into a missing firearm.

Police said the arrest follows the recovery of a weapon during the interrogation of organised criminal Makandure Madush in 2019. Subsequent investigations revealed that the firearm had been issued by the Sri Lanka Army to Devananda for his personal security in 2001.

It was revealed that the serial number of the weapon matched that of the firearm issued to the former Minister. During questioning, Devananda reportedly failed to provide a satisfactory explanation regarding how the weapon had gone missing.

ஒத்தவை: