நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

நாடெங்கும் புதைகுழிகள்! இருபதுக்கு மேல்!!


செம்மணியில் பேராசிரியர் ராஜ்சோமதேவ 

நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக யாழ். செம்மணி அடையாளம்!

காலைக்கதிர் Digital News Jul 24, 2025

யாழ். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இதுவரையில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் சிறுவர்களின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக யாழ். செம்மணி புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

2023 இல் மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளம் காணப்பட்டது. இங்கு 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

யாழ். செம்மணியில் தற்போது இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இடம்பெற்று வரும் வேளையில் 18ஆவது நாளான நேற்றைய தினம் (23) வரையில் புதைகுழி வளாகத்தில் இருந்து ஐந்து புதிய மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடங்களுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தால் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, நேற்றைய தினம் வரையில் 67 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த மனிதப் புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி, கொழும்பில் பொலிஸ் தடைகளுக்கு மத்தியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழிற்சங்கத் தலைவர்களும் வெகுஜன அமைப்புகளும் நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் இருபதுக்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

பேராசிரியர் ராஜ் சோமதேவ

AI Overview

பேராசிரியர் ராஜ் சோமதேவ, தொல்லியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர், குறிப்பாக மனித புதைக்குழிகள் மற்றும் குற்றவியல் சம்பவங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் முக்கிய சாட்சியாளராகவும் இருந்து வருகிறார். 

பேராசிரியர் ராஜ் சோமதேவ, யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைக்குழியில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தொடர்பான அறிக்கையை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ளார். அவரது அறிக்கையில், அந்த சடலங்கள் 1994 மற்றும் 1996 க்கு இடையில் புதைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் செம்மணி பகுதியில் நடந்த குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான தடயங்கள் இருப்பதையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் ஆய்வுகள், இலங்கைத் தமிழரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவர் பல்வேறு மனித உரிமை மீறல் வழக்குகளில் சாட்சியம் அளித்துள்ளார். குறிப்பாக, மனித புதைக்குழிகள் தொடர்பான ஆய்வுகளில், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். 

Delgahawaththage Raj Kumar Somadeva

From Wikipedia, the free encyclopedia

Born 01 November 1960, is a Senior Professor in Archaeology at the Postgraduate Institute of Archaeology, University of Kelaniya in Sri Lanka, and a Senior Fellow of the Sri Lanka Council of Archaeologists. He has received the Charles Wallace Research Fellowship from the Institute of Archeology at University College London in 2005.

Somadeva served as an Assistant Director of the Sigiriya - UNESCO - Sri Lanka Cultural Triangle Project from 1989 to 1994. During that period he also worked as the Field Director of the German-Sri Lanka collaboration excavation project and the Swedish-Sri Lanka Settlement archaeology project held in Sigiriya-Dambulla region.

He contributed his service as a member of the advisory committee to the Director General of Archaeology in Sri Lanka and to the Department of National Archives.

In 2013, he was appointed as a member of the National Research Council of Sri Lanka.

He also extended his capacity to revise the history teaching syllabuses in schools and has written several chapters to the current history textbooks.

As of 2022, he serves as a senior professor in archaeology at the Postgraduate Institute of Archaeology, University of Kelaniya.

In 2022, he was appointed as a member of the advisory committee to the Ministry of Tourism in Sri Lanka.

Currently, he is serving as a consultant to several projects funded by the UNDP.


ஒத்தவை: