நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

ஜே.வி.பி டில்வின் சில்வாவிற்கு லண்டனில் எதிர்ப்பு


ஜே.வி.பி பொதுச் செயலாளர்  டில்வின் சில்வாவிற்கு லண்டனில் எதிர்ப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் வருகையை எதிர்த்து, இன்று பிற்பகல் லண்டனில் கூடிய, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டன் வெம்பிளியில் உள்ள ஆல்பர்டன் உயர்நிலைப் பள்ளியில் இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்த, 1987-1989 ஜேவிபி கிளர்ச்சியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட போராளிகளின் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஜே.வி.பி பொதுச் செயலாளர்  டில்வின் சில்வா கலந்துகொண்டிருந்தார்.

அவரது வருகையால் ஆத்திரமடைந்த TCC குழுவினர்,  ஆல்பர்டன்  பள்ளியின் கார் நிறுத்துமிடத்திற்குள் சில்வாவின் காரைப் பின்னுக்குத் தள்ள முயன்றனர். 

அவரது வருகைக்கு முன்னதாகவே கூடியிருந்த கூட்டத்தினர், 'இலங்கை அரசு, பயங்கரவாத அரசு!' மற்றும் 'நிறுத்து, இனப்படுகொலையை நிறுத்து!' என்று கோஷமிட்டனர். 

இலங்கையில் தற்போது ஆட்சி புரியும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் பிரதான கட்சி JVP ஆகும். இலங்கையில் ஈழப்பிரிவினை கோரிக்கைக்கு எதிரான இதர எந்தக் கட்சிக்கும், ஜே.வி.பி சற்றும் சளைத்ததல்ல.2002 போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்த்தது மட்டுமல்ல போருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து இராணுவத்துக்கு ஆள் திரட்டியது. சந்திரிக்கா ஆட்சிக்கு பக்க பலமாக இருந்தது. சுனாமிக் கட்டமைபைக்கூட எதிர்த்தது.2005 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் இனப்படுகொலையின் முக்கிய கட்டமைப்பாளரான மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தது. இலங்கை இராணுவத்தின் இனப்படுகொலை தாக்குதலுக்கு வழிவகுத்த ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு இராணுவ தீர்வை JVP வலியுறுத்தியது.இவ்வாறு முள்ளிவாய்க்கால்ப் படுகொலைக்கும் துணைபோனது. 

ஆட்சி அதிகாரத்தை அறக்களைய மூலம் கைப்பற்றிய ஜே.வி.பி, இனப்படுகொலைக்கு நீதி விசாரணையை `உள் நாட்டுப் பொறிமுறை` என்று சாக்குச் சொல்லி தவிர்த்துவருகின்றது.

ஒத்தவை: